7 முறை கருக்கலைப்பால் நடிகையின் கர்ப்பப்பை அகற்றம்: வீரலட்சுமி!

சீமானால் பாதிக்கப்பட்டதாக கூறும் நடிகைக்கு ஆதரவாகவும் சீமானைக் கண்டித்தும் தமிழர் முன்னேற்றப்படை சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அதன் தலைவர் வீரலட்சுமி அறிவித்துள்ளார்.

சீமான் மீது 2011-ம் ஆண்டு நடிகை ஒருவர் பலாத்கார புகார் கொடுத்தார். அதில் தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் ஏமாற்றிவிட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த புகார் திரும்பப் பெறப்பட்டது. 2018-ம் ஆண்டும் இதேபோல புகார் தெரிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னரும் இப்புகார் விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை டிஸ்மிஸ் செய்த சென்னை உயர்நீதிமன்ற, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனடிப்படையில் சீமானிடம் சென்னை வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

நடிகையின் பலாத்கார புகார் பற்றி செய்தியாளர்களிடம் இடைவிடாமல் பேசி வரும் சீமான், அந்த நடிகை விரும்பித்தான் தம்முடன் படுக்கையை பகிர்ந்தார்; நடிகையை பலாத்காரம் செய்யவில்லை; ஆனால் அந்த நடிகைக்கு நிதி உதவியாக ரூ.50,000 கொடுத்தேன் என்றும் பலாத்காரம் குறித்து மிக கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தியும் பேசி வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பில் கடும் கன்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த பின்னணியில் சீமானால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நடிகைக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி களமிறங்கி உள்ளார். இதற்கு முன்னர் அந்த நடிகைக்கு ஆதரவாக இருந்தார் வீரலட்சுமி; பின்னர் நடிகைக்கும் வீரலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் வீரலட்சுமி இன்று வெளியிட்ட வீடியோவில் கூறி இருப்பதாவது:-

நடிகை என்னை தொடர்பு கொண்டு என்னைப் பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார். தற்போது நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து போராடுவோம் என்றார். பாதிக்கப்பட்ட எந்த பெண்ணுக்கும் இந்த வீரலட்சுமி உறுதுணையாக நிற்பேன். அதனால் நடிகைக்கு நீதி கிடைக்க நானும் எனது தமிழர் முன்னேற்றப்படையும் உறுதியாக துணை நிற்போம்.

சீமானால் 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதால் நடிகையின் கர்ப்பப்பையை எடுத்துவிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். நடிகையின் கர்ப்பப்பை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பெண்மையை போற்றுகிறவர்களும் மதிக்கிறவர்களும் நடிகைக்கு ஆதரவாக இருக்கின்றனர். சீமானால் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். இந்த நீதி நடிகைக்கு விரைவாக கிடைக்க எமது தமிழர் முன்னேற்றப் படை சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கிறோம். இவ்வாறு வீரலட்சுமி கூறியுள்ளார்.