அமெரிக்காவில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை!

அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவில் 2021ல் முற்றிலும் அழிக்கப்பட்ட ஆப்ரிக்க ராட்சத நத்தை மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. இது உலகின் அதிக அழிவை ஏற்படுத்தும் நத்தையாக உள்ளது. இது 500 விதமான தாவரங்களை உணவாக உட்கொள்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும் இவை எலி நுரையீரல் புழு ஓட்டுண்ணியை தன் உடலில் எடுத்துச்செல்கிறது. இது மனிதர்களுக்கு மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த நத்தையை கண்டால் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என புளோரிடா மாகாண அரசு தெரிவித்துள்ளது.

இந்த ராட்சத நத்தை மண்ணில் உள்ள கால்சியத்தை உறிஞ்சுவதால் மண்ணின் தரம் குறைகிறது. சுற்றுச்சூழல் விவசாயம் மனிதர்கள் என இவற்றால் மூன்றுவகை அச்சுறுத்தல் உள்ளது. இவை ஆண்டுக்கு 1200 முட்டைகளை இனப்பெருக்கம் செய்கிறது. இது 20 செ.மீ. நீளம் 12 செ.மீ. விட்டம் வரை வளரும். பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி நத்தையின் இயக்கம் செரிமானத்தை குறைத்து அதை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.