வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரால் 397 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. இதில் வேங்கை வயல் நீர்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக, முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முத்தையா, வேங்கை வயல் போலீஸ்காரர் முரளிராஜின் தந்தை ஜீவானந்தத்தை அவமானப்படுத்தியதாகவும், இதற்கு பழி வாங்கும் வகையில் போலீஸ்காரர் முரளிராஜாவால் சதிதிட்டம் தீட்டப்பட்டு, அவருடன் இணைந்து சுதர்ஷன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் இச்செயலை செய்ததாக சிபிசிஐடி போலீசாரால், புதுக்கோட்டை சிறப்பு நிதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் வழங்கப்பட்டுள்ளது. முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் 11ம் தேதி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் வழங்கப்பட்டுள்ளது. 3 பேரும் வீட்டில் இல்லாததால் அவர்களது குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் சம்மனை வழங்கினர்.