மாநில சுயாட்சி குறித்த தீர்மானம், தமிழக மக்களுக்கு எதிரானது: ஜிகே வாசன்!

மாநில சுயாட்சி குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழக மக்களுக்கு எதிரானது என ஜிகே வாசன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த நிலையில், மாநில சுயாட்சி குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழக மக்களுக்கு எதிரானது என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமாகா தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மத்திய அரசைக் குறை கூறி, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஏற்புடையதல்ல. தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எதிரானது என தெரிவித்துள்ளார்.