அரசு ஊழியர்களின் நலனுக்கான அறிவிப்புகளை வரவேற்கிறேன்: செல்வப்பெருந்தகை!

அரசு ஊழியர்களின் நலனுக்கான 9 அறிவிப்புகளை வரவேற்கிறேன். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

நிதிநிலை பற்றாக்குறை இருந்த போதிலும், அரசு ஊழியர்களின் நலனுக்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று 9 அறிவிப்புகளை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

முன்பிருந்த அ.தி.மு.க. அரசு, இவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் இருந்த நிலையில், அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகிணங்க இன்று(நேற்று) முதல்-அமைச்சர் 9 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை காங்கிரஸ் சார்பாக மனதார வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். முதல்வர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.