ஜம்மு காஷ்மீரை சுற்றியுள்ள மக்கள் வீதிகளில் இறங்குவதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
இப்போது ஜம்மு இருளில் மூழ்கியுள்ளது. நகர் முழுக்க சைரன் ஒலிகளை கேட்கமுடிகிறது. குண்டுவெடிப்பு மற்றும் கனரக பீரங்கித் தாக்குதல்களின் சத்தங்கள் விட்டுவிட்டு கேட்கின்றன. ஜம்மு மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைவருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து தெருக்களில் இறங்குவதைத் தவிர்த்து, வீட்டிலேயே இருங்கள்.
அடுத்த சில மணிநேரங்களுக்கு நீங்கள் வசதியாக தங்கக்கூடிய அருகிலுள்ள இடத்தில் இருங்கள். வதந்திகளைப் புறக்கணிக்கவும். ஆதாரமற்ற அல்லது சரிபார்க்கப்படாத கதைகளைப் பரப்பாதீர்கள். இதை நாம் ஒன்றாகக் கடந்து செல்வோம். இவ்வாறு உமர் அப்துல்லா கூறியுள்ளார்.