தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்: பெ.சண்முகம்!

தொழிலாளர் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பெ.சண்முகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

தொழிலாளர் வர்க்கம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக போராடிப் பெற்ற உரிமைகளை, தொழிற்சங்க சடங்களை அடித்து நொறுக்கி மோடி அரசானது தற்போது முதலாளிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவாக தொழிலாளர்களுக்கு விரோதமாக 4 தொகுப்புச் சட்டங்களாக மாற்றியுள்ளது.

இச்சட்டங்கள் இன்னும் அமலாக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இவற்றைத் திரும்பப் பெற வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.