‛ஆபரேஷன் கெல்லர்’: 3 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் கூட நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் ‛ஆபரேஷன் சிந்தூரை’ தொடர்ந்து நம் ராணுவம் ‛ஆபரேஷன் கெல்லர்’ என்ற நடவடிக்கையில் ஈடுபட்டு 3 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை சுட்டு கொன்று அதிரடி காட்டி உள்ளனர்.

பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. குறிப்பாக நம் நாட்டுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான். கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தானில் நுழைந்த ‛தி ரெஸிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதையடுத்து நம் நாடு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடங்கியது. கடந்த 7 ம் தேதி பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் ஏவுகணைகள் வீசி அழிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்க வந்த பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி நம் நாட்டின் ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் முக்கிய 3 விமான தளங்களும் அழிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் அதிரடி ஆக்ஷனால் நிலைக்குலைந்த பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய கெஞ்சியது. இதனை நம் நாடு ஏற்றதால் தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

இதற்கிடையே தான் ‛ஆபரேஷன் கெல்லர்’ நடவடிக்கையை நம் ராணுவம் தொடங்கி அதிரடி காட்டி உள்ளது. அதாவது ஜம்மு காஷ்மீரில் சோபியான் என்ற மாவட்டம் உள்ளது. அங்கு கெல்லர் எனும் அடர் காடு உள்ளது. இந்த அடர்ந்த காட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராஷ்ட்ரிய ரைபிள் யூனிட்டில் இருந்து ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடதை்தது. இதையடுத்து ‛ஆபரேஷன் கெல்லர்’ நடவடிக்கையை நம் ராணுவ வீரர்கள் தொடங்கினர். அப்போது அந்த காட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை நெருங்கியப்போது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு நம் ராணுவமும் துப்பாக்கியால் சுட்டது. இந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் இருவரின் அடையாளம் தெரியவந்துள்ளது. அதன்படி ஒருவனின் பெயர் ஷாகித் குட்டாய். இவன் சோபியான் மாவட்டம் ஹீரபோரா பகுதியை சேர்ந்தவன்.இவன் 2023ல் லஷ்கர் இ தொய்பாவில் இணைந்துள்ளான். கடந்த 2024 ஏப்ரல் 8 ம் தேதி டேனிஸ் ரெசார்ட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு ஜெர்மன் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 3 பேர் காயமடைய காரணமாக இருந்தவன். அதன்பிறகு 2024 மே மாதம் ல் ஹீரபோரா பஞ்சாயத்து தலைவரான பாஜகவை சேர்ந்தவர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்பு உள்ளது.

இரண்டாவது பயங்கரவாதியின் பெயர் அத்னன் ஷபி தர். இவன் ஷோபியானின் மெல்ஹோராவை சேர்ந்தவன். இவன் 2024 அக்டோபரில் லஷ்கர் இ தொய்பாவில் இணைந்துள்ளான். சோபியனின் வாஷி பகுதியில் காஷ்மீரி அல்லாத தொழிலாளர்களை கொன்ற சம்பவத்தில் இவனுக்கு தொடர்பு உண்டு. 3வது பயங்கரவாதியின் பெயர் ஹரீஷ் நசீர். இவன் புல்வாமாவை சேர்ந்தவர். 2024 டேஷின் ரெசார்ட் தாக்குதலில் தொடர்பு கொண்டவன். இவர்களிடம் இருந்து 3ஏகே 47 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகளை போலீசார் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து தேடிவருகின்றனர். இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக வெவ்வேற பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ‛ஆபரேஷன் கெல்லர்’ நடவடிக்கையில் 3 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை நம் ராணுவம் வீழ்த்தி உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.