இந்தியாவின் கூட்டாட்சி உணர்வை பாதுகாப்பதில் உங்கள் குரலுக்கு நன்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
அன்புள்ள சகோதரர் ராகுல் காந்தி, மாநிலங்களின் உரிமைகளையும் இந்தியாவின் கூட்டாட்சி உணர்வை பாதுகாப்பதில் உங்கள் குரலுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் விவகாரம் தொடர்பாக 8 மாநில முதல்-மந்திரிகளுக்கு எழுதிய கடிதம் தொடர்பான பதிவை மக்களவை எதிர்கட்சிதலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலைதள பதிவில் பகிர்ந்திருந்தார்.