மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, எச்.ராஜா உட்பட 4 பேர் மீது முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மே 17-ம் தேதி வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை ஆதரித்தும், பகல்காம் தாக்குதலைக் கண்டித்தும் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், திருவாரூர் மாவட்டத் தலைவர் வி.கே.செல்வம், சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளர் சையது இப்ராஹிம் ஆகியோர் பேசினர்.
அப்போது, அவர்கள் மதமோதலை தூண்டும் வகையில் பேசியதாக 4 பிரிவுகளின் கீழ் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.