எடப்பாடி பழனி​சாமி​யின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சேலத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி​யின் வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்​டல் வந்​தது. போலீ​ஸார் நடத்​திய சோதனை​யில் அது புரளி என்​பது தெரிய​வந்​தது.

அதி​முக பொதுச் செய​லா​ள​ரும், எதிர்க்​கட்சித் தலை​வரு​மான எடப்பாடி பழனி​சாமி​யின் கோவை​யில் இருந்து நேற்று மாலை 7 மணி அளவில் சேலம் சூரமங்​கலம் நெடுஞ்​சாலை நகரில் உள்ள அவரது இல்​லத்​துக்கு வந்தார்.

இந்​நிலை​யில் அவரது வீட்​டில் வெடிகுண்டு இருப்​ப​தாக சென்​னை​யில் உள்ள காவல்​துறை கட்​டுப்​பாட்டு அலு​வல​கத்​துக்கு தகவல் வந்​தது. இதையடுத்து சேலம் மாநகர காவல் துறை அலு​வல​கத்​துக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. வெடிகுண்டு தடுப்​புப் பிரிவு ஆய்வாளர் மற்றும் சூரமங்​கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் தலை​மையி​லான போலீ​ஸார் பழனி​சாமி வீட்டில் சோதனை நடத்தினர். வீடு, கார் ஷெட் என்ன பல்​வேறு இடங்​களி​லும் போலீ​ஸார் நடத்​திய சோதனை​யில் வெடிகுண்டு எது​வும் கண்​டு​ பிடிக்​கப்​பட​வில்​லை.