மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மே 29-ல் ஜம்மு – காஷ்மீர் செல்கிறார்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக ஜம்மு – காஷ்மீருக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 29ஆம் தேதி ஜம்மு – காஷ்மீருக்குச் செல்லும் அவர், இரு நாள்கள் ஜம்மு பிரிவில் உள்ளப் பகுதிகளைப் பார்வையிடவுள்ளார். இதோடு மட்டுமின்றி, சமீபத்தில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பூஞ்ச் எல்லைப் பகுதியையொட்டியுள்ள குடும்பங்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பகல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தப் பிறகு முதல்முறையாக ஜம்மு – காஷ்மீருக்கு அமித் ஷா செல்லவுள்ளார். பகல்காம் தாக்குதலின்போது அனந்த்நாக் மாவட்டத்துக்குச் சென்ற அமித் ஷா, தாக்குதல் நடைபெற்ற பைசாரன் பள்ளத்தாக்கில் நேரில் சென்று பார்வையிட்டார்.