சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி, கலந்துரையாடினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டிராகன்’ விண்கலத்தின் மூலம் 28 மணி நேர பயணத்துக்குப் பிறகு சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் சுபான்ஷு சுக்லா அடைந்தார். சா்வதேச விண்வெளி நிலையத்தில் அவர் 14 நாள்கள் தங்கியிருந்து, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறாா்.
மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா்களில் ஒருவரான சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் அங்கிருந்து பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் கலந்துரையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
