முதல்வர் வேட்பாளரை அமித் ஷா, பழனிசாமி முடிவு செய்வார்கள்: எல்.முருகன்!

தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி குறித்​தும், முதல்​வர் வேட்​பாளர் யார் என்​பது குறித்​தும் மத்திய அமைச்சர் அமித்​ஷா​வும், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யும் பேசி முடி​வெடுப்​பார்​கள் என்று மத்​திய இணை அமைச்​சர் எல்.முருகன் கூறி​னார்.

திருச்​சி​யில் முப்​படை ஓய்​வூ​தி​யர்​களுக்​கான மாபெரும் குறைதீர் கூட்​டத்தை மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் நேற்று தொடங்​கி​வைத்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:-

திமுக​வினர் தோல்வி பயத்​துடன் ஆட்சி நடத்தி வரு​கின்​றனர். தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் வெற்றி மூலம் திமுகவை வீட்​டுக்கு அனுப்​புவோம். முதல்​வர் செயல்​ப​டாததன் விளை​வாக லாக்​கப் மரணம் நடந்​துள்​ளது. காவல் நிலை​யத்துக்கு செல்​லவே மக்​கள் அச்​சப்​படு​கிறார்​கள். முதல்​வரின் உத்​தரவை எந்த அதி​காரி​யும் பின்​பற்​று​வ​தில்​லை. அதி​காரி​கள் ஆட்​சி​தான் தமிழகத்​தில் நடக்​கிறது. அவர் சரி​யாக செயல்​பட​வில்​லை. திமுகவுட​னான கூட்​ட​ணிக்​காக தமிழக மக்களின் நலனை கூட்​ட​ணிக் கட்​சிகள் அடகு வைத்து விட்​டன.

துறை அமைச்​சர் என்ற முறை​யில் இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரகு​மானின் ஸ்டூடியோவை பார்​வை​யிட்​டேன். அவரிடம் அரசி​யல் எது​வும் பேச​வில்​லை. தமிழகத்​தில் அதி​முக தலை​மை​யில்​தான் தேசிய ஜனநாயக கூட்​டணி இயங்​கும் என்று மத்​திய அமைச்​சர் அமித்ஷா கூறி​விட்​டார். தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி குறித்​தும், முதல்​வர் வேட்​பாளர் குறித்​தும் அமித்​ஷா​வும், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யும் பேசி முடி​வெடுப்​பார்​கள். இதில் நான் கருத்து கூற முடி​யாது. கூட்​ட​ணி​யில் குழப்​பம் இல்​லை. எங்​கள் கூட்​ட​ணி​தான் 2026-ல் வெற்றி பெறும். இவ்​வாறு எல்​.​முரு​கன் கூறி​னார்.