4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது: உயர் நீதிமன்றம்!

தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 10 ஆம் தேதி முதல் நாங்குநேரி, கப்பலூர், சாலைப்புதூர், எட்டுராவட்டம் வழியே அரசு பேருந்தை அனுமதிக்க கூடாது என்று சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகம் தங்களுக்கு செலுத்த வேண்டிய ரூ.276 கோடியை செலுத்தவில்லை என மதுரை – குமரி டோல்வே தனியார் நிறுவனம், குமரி – எட்டுராவட்டம் டோல்வே தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.276 கோடி நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை – குமரி டோல்வே தனியார் நிறுவனம், குமரி – எட்டுராவட்டம் டோல்வே தனியார் நிறுவனம், சாலைப்புதூர் மதுரை டோல்வே நிறுவனம், நாங்குநேரி குமரி டோல்வே நிறுவனம் ஆகிய 4 நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தென்மாவட்டத்தில் உள்ள 4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது. வரும் 10 ஆம் தேதி முதல், நாங்குநேரி, கப்பலூர், சாலைப்புதூர், எட்டுராவட்டம் வழியே அரசு பேருந்தை அனுமதிக்க கூடாது உத்தரவிட்டனர். மேலும் சுங்கச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.