வாகனம் பறிக்கப்பட்டதால் அலுவலகத்துக்கு நடந்தே சென்ற காவல் துணை கண்காணிப்பாளர்!

மயி​லாடு​துறை​யில் வாக​னம் பறிக்​கப்​பட்​ட​தாக கூறப்​படும் நிலை​யில், தனது அலு​வல​கத்​துக்கு காவல் துணைக் கண்​காணிப்​பாளர் நடந்து சென்ற வீடியோ, சமூக வலை​தளங்​களில் வைரலாகி பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

மயி​லாடு​துறை மாவட்ட மது​விலக்கு அமலாக்​கப் பிரிவு டிஎஸ்​பி​யாக கடந்த ஆண்டு நவம்​பர் முதல் சுந்​தரேசன் பணி​யாற்றி வரு​கிறார். சட்​ட​விரோத மது, சாரா​யம் கடத்​தலில் ஈடு​படு​வோர் மீது இவர் கடும் நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறார். இந்​நிலை​யில், இவரது வாக​னத்தை பறித்​துக் கொண்​ட​தால், டிஎஸ்பி சுந்​தரேசன் வீட்​டில் இருந்து அலு​வல​கத்​துக்கு நடந்து செல்​லும் வீடியோ சமூக வலை​தளங்​களில் பரவியது.

இதுகுறித்து டிஎஸ்பி சுந்​தரேசன் கூறிய​தாவது:-

முதல்வர் ஸ்டாலின் சிறந்த நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறார். ஆனால் சில அதிகாரிகள் உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்களா என்று தெரியவில்லை. மனித உரிமை ஆணையத்தில் பணியாற்றிய பின், மயிலாடுதுறைக்கு 2024, நவம்பர் மாதம் வந்தேன். நான் சம்பளத்தில் மட்டுமே வேலை செய்கிறேன். ஆனால் மார்ச் மாதம் வரை எனக்கு சம்பளம் போடவில்லை. இதுதொடர்பாக எஸ்பியிடம் மனு கொடுத்துள்ளேன். இவையனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தேன். ஒரு கட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்னதாக விஆர்எஸ் கொடுத்துவிட்டேன். அப்படிக் கொடுத்தால், 3 துறைகள் சார்பாக விசாரிப்பார்கள். நற்சான்றிதழ் இருந்தால் உடனடியாக விஆர்எஸ் கொடுத்துவிடுவார்கள். 3 துறைகளிலும் விசாரித்து எந்த குற்றச்சாட்டும் என் மீது இல்லையென்று தெரிந்த பின், ஏப்ரல் மாதத்துடன் வேலையில் இருந்து போகவிருந்தேன். ஆனால் மார்ச் மாதம் மாவட்ட எஸ்பி அழைத்து அறிவுரைகளை அளித்தார். அதன்பின் டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே, இப்படிச் செய்கிறார்கள்.

என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்தது யார் தெரியுமா? இந்த எஸ்பி, காவல் ஆய்வாளர்.. காவல் ஆய்வாளர் என்று சொல்லுவதற்கு லாயக்கில்லை.. ஏடிஜிபி சட்டம் – ஒழுங்கு, ஐஜி மற்றும் எஸ்பி ஆகிய மூவரும் நின்று பேச வேண்டும். இந்த விவகாரம் எவ்வளவு பெரிய பிரச்சனை என்று நன்றாகத் தெரியும். போலீஸ் விதிகளில் இது மிகப்பெரிய தவறு.. தெரியாமல் பேசவில்லை.. இந்த அதிகாரிகளுக்கு எதிராக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை இப்படிப் பேசுவதற்குத் தூண்டிவிட்டார்கள். இதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதிரி அதிகாரிகள் இருக்கும் வரை, என்னை மாதிரியான அதிகாரிகள் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள். அஜித் குமார் வழக்கில் மேல் அதிகாரிகளின் தவறான உத்தரவால், அனைத்து போலீஸ் குடும்பம் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது. இதே எஸ்பி-யும் அதனைத்தான் செய்து வருகிறார். சிறப்பு டீம் ஒன்றை வைத்து கொண்டு பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார். சிறப்பு டீம் யாரென்று மேல் அதிகாரிகள் விசாரித்தால் தெரியும். எந்த விசாரணையாக இருந்தாலும், நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

கடந்த 5-ம் தேதி அமைச்​சரின் பாது​காப்பு பணிக்​காக எனது வாக​னத்தை மாவட்ட காவல் துறை தரப்​பில் கேட்​டார்​கள். எழுத்​துப்​பூர்​வ​மாக உத்​தரவு பிறப்​பித்​தால் வாக​னத்தை வழங்​கு​வ​தாக தெரி​வித்​தேன். இதனால், என்னை திருச்​செந்​தூர் கும்​பாபிஷேக பாது​காப்​புப் பணிக்கு அனுப்​பி​வைத்​தனர். அந்​தப் பணி முடிந்து திரும்​பிய பின்னர், முதல்​வர் வருகை பாது​காப்​புப் பணிக்கு அனுப்​பினர்.

அந்​தப் பணியை முடித்​து​விட்டு திரும்​பிய​போது, அமைச்​சர் பாது​காப்பு பணிக்கு எனது வாக​னத்தை தரு​மாறு மீண்​டும் கேட்டனர். அந்த வாக​னம் அவ்​வப்​போது பழு​தாவ​தாக கூறியதை​யும் கேட்​காமல், கடந்த 10-ம் தேதி வாக​னத்தை வாங்​கிக் கொண்டனர். இது​வரை அந்த வாக​னத்தை திரும்ப வழங்​க​வில்​லை. இதனால் 2 நாட்​களாக அலு​வல​கத்​துக்கு நடந்தே சென்​றேன்.

நான் பொறுப்​பேற்​றது முதல் சாரா​யம், புதுச்​சேரி மது விற்​பனையை கட்​டுக்​குள் கொண்டு வந்​த​தால், சிலரது வரு​மானம் பாதிக்​கப்​பட்​டு​விட்​டது. இது தொடர்​பாக என்னை அழைத்​துப் பேசிய உயர​தி​காரி, வளைந்து கொடுத்து போகா​விட்​டால், விரலை உடைத்​து​விடு​வார்​கள் என்று கூறி​னார்.

நான் நேர்​மை​யாக இருப்​ப​தால் பல்​வேறு சிக்​கல்​களை அனுபவிக்​கிறேன். மனித உரிமை ஆணை​யத்​தில் பணி​யாற்​றிய​போது, ஒரு வழக்​கில் தொடர்​புடைய காவல் துறையை சேர்ந்த சிலர் மீது புகார் கொடுத்​த​தால், என்னை பழி​வாங்​கு​கிறார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

எஸ்​.பி. ஸ்டா​லின் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “டிஎஸ்பி சுந்​தரேசனின் வாக​னம் பெறப்​பட்​ட​தில் முறை​யான நடை​முறை​கள் பின்​பற்​றப்​பட்​டன. மாவட்ட காவல் துறை​யில் இருந்து அழுத்​தம் தரப்​படு​வ​தாக அவர் கூறியதும், வளைந்து போகச் சொன்​ன​தாக கூறியதும் தவறான தகவல். அவ்​வாறு எந்த அழுத்​த​மும் தரப்​பட​வில்​லை. வழக்​க​மான நடை​முறைபடி​தான் அவர் பாது​காப்பு பணிக்கு அனுப்​பப்​பட்​டார்” என்​றார்​.

இந்நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்​ணா​மலை சமூக வலை​தளப் பக்​கத்​தில் பதி​விட்​டிருப்​ப​தாவது:-

மயி​லாடு​துறை​யில் சட்​ட​விரோத மது விற்​பனை​யில் ஈடு​படு​பவர்​கள், போதைப் பொருள்​கள் விற்​றவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுத்​து, மக்​களின் பாராட்​டு​களைப் பெற்​றவர் டிஎஸ்பி சுந்தரேசன். அவரது நேர்​மை​யான நடவடிக்​கைகள் பிடிக்​காமல், அவமானப்​படுத்​தும் நோக்​குடன், அவரது வாக​னத்தை திரும்​பப் பெற்​றுள்​ளனர்.
இதனால் அவர் நடந்தே அலு​வல​கம் சென்​றது அதிர்ச்சி அளிக்​கிறது. மக்​களுக்​காகப் பணி​யாற்​றும் அதி​காரியை அவமானப்​படுத்​து​வதும், அலைக்​கழிப்​பதும் வன்​மை​யாகக் கண்​டிக்​கத்​தக்​கது. தமிழக காவல் துறை​யினரின் தன்​மானத்​தைப் பாது​காக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அண்​ணா​மலை வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.