முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!

முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளோட்டோர் முதல்வரிடம் தொலைபேசி வாயிலாகப் பேசி உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர். இவர்களைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக மு.க. ஸ்டாலின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்படவே, அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.