சட்டவிரோத சிறுநீரக விற்பனையை தடுக்க வேண்டும்: ஓ.பன்​னீர்​செல்​வம்!

தமிழகத்​தில் சட்​ட​விரோத சிறுநீரக விற்​பனையை தடுக்க வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக ஓ.பன்​னீர்​செல்​வம்வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:-

நாமக்​கல் மாவட்​டம், பள்​ளி​ பாளை​யத்​தைச் சேர்ந்த பெண்களை பெரிய மருத்​து​வ​மனை​களுக்கு அழைத்​துச் சென்று கிட்னி விற்​பனை செய்​யப்​படு​வ​தாக சமூகவலை​தளங்​களில் தகவல் பரவியது. இதையடுத்​து, மேற்​கொண்ட விசா​ரணை​யில், திருச்​சி, பெரம்​பலூர் மற்​றும் கொச்சி ஆகிய இடங்​களில் உள்ள பெரிய மருத்துவமனை​களுக்கு கிட்னி விற்​பனை செய்​யப்​பட்​டுள்​ளது தெரிய​வந்​துள்​ளது. சட்ட விரோத கிட்னி விற்​பனையை கண்காணிக்க வேண்​டிய பொறுப்​பும், கடமை​யும் மாநில அரசுக்கு உண்​டு. ஆனால், இதனைக் கண்​காணிக்க திமுக அரசு தவறி​விட்​டது. எனவே, முதல்​வர் ஸ்டா​லின் தனிக் கவனம் செலுத்​தி, சட்ட விரோத கிட்னி விற்​பனையை தடுக்க வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.