பிரதமர் நரேந்திர மோடிக்கு கீழடி ஆய்வறிக்கை பிடிக்கவில்லையே ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்பி தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-
‘கடந்த ஆண்டு தூத்துக்குடி முத்துக்களை பில்கேட்ஸுக்கு பரிசாக வழங்கினேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவிலேயே 3000 ஆண்டுகளுக்கு முந்தைய முத்துக்கள் அகழாய்வில் கிடைத்தது கீழடியில் மட்டுந்தான். வரலாற்றின் முத்தான கீழடி அறிக்கை ஒன்றிய அரசிற்கு கொடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அது ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை பிரதமரே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
