தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும், ஒரு நாளைக்கு 50 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை மற்றும் மேற்குதிசை காற்று மாறுபாடு காரணமாக மழை பெய்தது. இதன்பிறகு மீண்டும் வெயில் அடித்தது. எனினும் பலத்த தரைக்காற்றும் வீசி வருகிறது. மாறி மாறி கிளைமேட் இருந்து வருவதால் சளி, காய்ச்சல் போன்ற நோய்களும் பரவி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகரித்து இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்து இருப்பதாகவும், தினமும் 50 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை டெங்கு பரவலை கட்டுப்படுத்த சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. தினமும் 50 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தின் சென்னை, கோவை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. டெங்கு பரவலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். டெங்கு பரவலை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளோடு இணைந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், மக்கள் கவனமாக இருக்க விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
