5-ம் தேதி ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன்!

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானி (66) வரும் 5-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “லஞ்சம், பிணையற்ற கடன் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், யெஸ் வங்கியில் வாங்கிய ரூ.3,000 கோடி கடனை தொழிலதிபர் அனில் அம்பானி சட்டவிரோதமாக மடைமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதியன்று அனில் அம்பானி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது வாக்​குமூலம் பணமோசடி தடுப்​புச் சட்​டத்​தின் (பிஎம்​எல்ஏ) கீழ் பதிவு செய்​யப்​படும்” என்று தெரி​வித்​தன.

இந்த விவ​காரத்​தில் கடந்த 2024 நவம்​பர் 11-ல், டெல்லி காவல்​துறை​யின் பொருளா​தார குற்​றப்​பிரிவு பதிவு செய்த வழக்​கின் அடிப்​படை​யில் தற்​போது அமலாக்​கத் துறை​யும் வழக்கு தகவல் அறிக்கை பதிவு செய்​து விசா​ரணை​யில் இறங்​கி​யுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​து உள்​ளனர்.

அனில் அம்​பானி குழு​மத்​தின் பல நிறு​வனங்​கள் ரூ.10,000 கோடிக்​கும் அதி​க​மான நிதி முறை​கேடு​களில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.