பாமக தலைவராக அன்புமணியே நீடிப்பார் என பொதுக்குழு தீர்மானம்!

ராம​தாஸுடன் சமா​தான பேச்​சு​வார்த்தை தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. ஆனால், அவருடன் இருக்​கும் தீயசக்​தி​கள், குள்​ளநரி கூட்​டம் தடுக்​கிறது என பாமக பொதுக்​குழு​வில் அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி தெரி​வித்​தார்.

பாமக பொதுக்​குழு கூட்​டம், அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி தலை​மை​யில் மாமல்​லபுரத்​தில் நேற்று நடந்​தது. கூட்​டத்​தில் கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி, பொதுச்​செய​லா​ளர் வடிவேல் ராவணன், பொருளாளர் தில​க​பாமா உள்​ளிட்ட நிர்​வாகி​கள்அடுத்த ஓராண்​டுக்கு அந்த பொறுப்​பு​களில் அப்​படியே தொடர்​வார்​கள். மீண்​டும் பாமக​வின் உட்​கட்சி தேர்​தல் 2026 ஆகஸ்ட் மாதம் நடத்​தப்​படும் என தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இந்த தீர்​மானத்தை அரங்​கில் கூடி​யிருந்த 2,500 பொதுக்​குழு உறுப்​பினர்​களும் கைதட்டி வரவேற்​றனர்.

அதே​போல், வன்​னியர்​களுக்கு விரை​வில் இடஒதுக்​கீடு வழங்​கா​விட்​டால், சிறை நிரப்​பும் போராட்​டம் நடத்​தப்​படும். தமிழகத்​தில் சாதி​வாரி மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு நடத்​து​வதற்​கான அறி​விப்பை வரும் ஆக. 15-ம் தேதி தமிழக அரசு வெளி​யிட வேண்​டும். சட்​டப்​பேரவை தேர்​தலுக்​குப் பிறகு அமை​யும் புதிய ஆட்​சி​யில் முழு மது​விலக்கு நடை​முறைப்​படுத்​து​வதை சாத்​தி​ய​மாக்க உழைப்​பது, திமுக அரசை வரும் தேர்​தலில் வீழ்த்​து​வது உள்​ளிட்ட 19 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

கூட்​டத்​தில் அன்​புமணி பேசி​ய​தாவது:-

இப்​போதைய இலக்கு திமுக மீண்​டும் ஆட்​சிக்கு வரக்​கூ​டாது. மெகா கூட்​டணி அமைப்​போம். கட்​சி​யின் நிறு​வனர் ராம​தாஸ் தான் நம்​முடைய குலதெய்​வம். இங்கு சாமி பிரச்​சினை இல்​லை. பூசா​ரி​தான் பிரச்​சினை. நிரந்​தர​மாக அவருக்கு இங்கே ஒரு நாற்​காலி இருக்​கிறது. அவர் வரு​வார் என்று நம்​பு​கிறேன். எனக்கு தலை​வர் பதவி மீது ஆசை கிடை​யாது. என்​னுடைய நோக்​கமே சமு​தா​யத்தை அடுத்த கட்​டத்​துக்கு கொண்டு செல்ல வேண்​டும் என்​பது தான்.

பொதுக்​குழு கூட்​டம் நடத்த நமக்கு தடைஇல்லை என நீதி​மன்​றம் கூறியதை கொண்​டாட மனமில்​லை. ராம​தாஸுடன் சமா​தான பேச்​சு​வார்த்தை தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. அவருடன் இருக்​கும் சில தீயசக்​தி​கள், குள்​ள நரிக் கூட்​டம் அதனை கெடுக்​கின்​றனர். 40 முறைக்கு மேல் நான் பேசிவிட்​டேன். நமக்​குள்​ளேயே மாறி மாறி பதி​விட வேண்​டாம். சண்​டை​யிட வேண்​டாம். இப்​படி எல்​லாம் ஒரு சூழல் வரும் என்று நான் நினைத்து பார்த்​ததே கிடை​யாது. நான்​ உறு​தியாக நிற்​கிறேன். இவ்​வாறு அவர்​ கூறினார்.