அமெரிக்காவில் 2 குழந்தைகளுக்கு பரவியது குரங்கம்மை!

அமெரிக்காவில் முதல் முறையாக குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை பரவியது. தற்போது ஆசிய நாடுகளிலும் பரவி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் முதல் முறையாக குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கலிபோர்னியாவில் ஒரு குழந்தைக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளது. அதே போல் வாஷிங்டனில் அமெரிக்க குடியுரிமை அல்லாத ஒரு குழந்தைக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இரு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும், சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது ஆராயப்பட்டு வருகிறது.