உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்

உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி தொடர்களுடன் இன்று காணொளி வாயிலாக உரையாடினார். இமாச்சல் பிரதேச சோலன் நகர ஆம் ஆத்மி உறுப்பினர்கள் உடனான இந்த உரையாடலில் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

டெல்லியில் மருத்துவ சிகிச்சை, தண்ணீர், மின்சாரம் இலவசமாக கிடைக்கிறது. ஊழலை ஒழித்ததால் இதையெல்லாம் சாத்தியமாகியுள்ளது. நாங்கள் எந்த வரியையும் உயர்த்தவில்லை. உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இமாச்சல் பிரதேசத்தில் ஆம் ஆத்மி அரசாங்கத்தை உருவாக்குங்கள், பணவீக்கத்திலிருந்து நாங்கள் உங்களுக்கு நிவாரணம் தருவோம். இன்று மக்கள் பணவீக்கத்தால் கலக்கமடைந்துள்ளனர். மத்திய அரசு தயிர், கோதுமை, அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியை விதித்துள்ளனர். ஆங்கிலேயர்களும் அவ்வாறே செய்து வந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.