அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளை சாப்பிடும்படி, நிபுணர்கள் வலியுறுத்துவது ஏன் தெரியுமா? மீனை தினமும் சாப்பிட்டால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன தெரியுமா? மற்ற அசைவு உணவுகளில் இல்லாத அளவுக்கு, கடல் மீன்களில் சற்று கூடுதலாகவே சத்துக்கள் உள்ளதாம்.. ஒவ்வொரு வகையான மீன்களிலும், ஒவ்வொரு சத்துக்கள் இருக்கின்றன..
மீன்களை தவறாமல் சாப்பிடுபவர்களுக்கு, கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனைகள், வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயங்கள் குறைகின்றன.. நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.. புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.. சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.. இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது, உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள்தான், இருதயம், மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது.
ஒமேகா-3 அமிலத்தை அதிகமாக உட்கொள்ளும்போது, மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறைகிறதாம். அதுமட்டுமல்ல, கண், காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ஒமேகா 3 உள்ளது.. தினமும் மீன் சாப்பிடுவதனால் ரத்தக்குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறதாம்.. வைட்டமின் D சத்துக்களும் நிறைவாக கிடைக்கிறது. எலும்புகளும், பற்களும் வலுவாக வைத்து கொள்ள முடியும்.. கெட்ட கொழுப்புகளை குறைப்பதுடன், கெட்ட கொழுப்புக்கள் உடலில் சேர்வதையும் இந்த மீன்கள் தடுக்கின்றன.
மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, சர்க்கரை நோய், முடக்குவாதம் போன்ற நோய்களின் தாக்கம் மிகக்குறைவாகவே காணப்படுகிறது.. உணவில் மீன்களை அதிகமாக சேர்த்து வந்தால், முடக்குவாதத்தில் ஏற்படும் வீக்கத்தையும், அதன் வலியையும் வெகுவாக குறைக்கலாம்.. சருமத்துக்கும் கசவமாக திகழ்கிறது. தலைமுடி வளர்ச்சி பெற வேண்டுமானால், சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களை தேர்ந்தெடுக்கலாம்.. பொதுவாக, 8 வார காலத்தில், மீன்களை மட்டுமே சாப்பிட்டவர்கள் எடை குறைந்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.. எனவே, எடை குறைக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஒமேகா 3 உட்பட புரோட்டீன் அதிகமுள்ள சால்மன், டிரௌட், மத்தி, டுனா மற்றும் கானாங்கெளுத்தி எனும் அயிலை, முரல் மீன், சங்கரா மீன், மத்தி, சாளை, நெத்திலி, சூரை மீன்களை தேர்ந்தெடுக்கலாம். முள் அதிகமாக இருப்பதால் இதை நிறைய பேர் தவிர்த்துவிடுவார்கள். ஆனால், அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது இந்த மீன்கள்தான். மொத்தத்தில், மீன்கள் பல முக்கிய ஊட்டச்சத்துக்களின் ஒரே ஒரு மூலமாக இருப்பதால்தான், மனித ஆயுளை கூட்டுகிறது.