சிறுநீரகம் முதல் கல்லீரல் வரை காக்கும் மஞ்சளின் மகிமை!

ஒரு ஸ்பூன் மஞ்சள் உணவில் சேர்த்து கொண்டாலே, இதய ஆரோக்கியம் மேம்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.. அப்படியென்ன நன்மை தருகிறது மஞ்சள்? சீன மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் ஆயிரக்கணக்கான வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பலவிதமான நோய்களை மஞ்சள் குணப்படுத்துகிறது என்றால் அதற்கு காரணம், மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருள்தான்.. முக்கியமாக இதயத்தை பாதுகாப்பதே, குர்குமின் என்ற பொருள்தானாம். இந்த குர்குமினில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன.. எனவே, ரத்தத்தை மெலிக்கவும், கொழுப்பை குறைக்கவும், தமனிகள் குறுகுவதை தடுக்கவும் இந்த குர்குமின்தான் மூலக்காரணமாக உதவுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, தொடர்ந்து மஞ்சளை உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு இதய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறதாம்.

எந்தவிதமான புற்றுநோய்களையும் நம்மை நெருங்கவிடாமல் செய்துவிடும் இந்த மஞ்சள்.. புற்றுநோய் கட்டிகளுக்கு எதிராக செயல்படுவது இந்த குர்குமின்.. புற்றுநோய் சிகிச்சையில் கதிர்வீச்சு, கீமோதெரபியுடன் இணைந்து பயன்படுத்துவது பற்றி ஆய்வாளர்கள் இன்னமும் இதுகுறித்து ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.. புற்றுநோய் மட்டுமல்லாமல், இந்த மஞ்சளை பற்றி 7 ஆயிரம் விஞ்ஞான ஆய்வுகள் இருக்கின்றனவாம். வெறுமனே ஒரு கிளாஸ் டம்ளர் வெந்நீரில், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து அப்படியே வைத்துவிட வேண்டும். 5 நிமிடம் கழித்து, அந்த தண்ணீரை வடிகட்டி, மீண்டும் கொதிக்கவிட்டு, தேன், எலுமிச்சை சாறு, மிளகு பொடி சேர்த்து குடிக்க வேண்டும். இந்த ஒரு பானம் மட்டுமே உடலிலுள்ள பல கோளாறுகளை தீர்க்கிறதாம். அல்லது மஞ்சள், இஞ்சி, கருப்பு மிளகு இந்த மூன்றையும் சேர்த்து டீ தயாரித்து குடித்தாலே போதும்.. நம்முடைய ஆரோக்கியம் தழைக்கும் என்கிறார்கள்..

புற்று நோய், இருதய நோய் தாக்குதல், மனச்சோர்வு, மறதி, மனநிலை சீராய் இருத்தல், மன அழுத்தம், மூட்டுவலி, டைப் 2 நீரிழிவு போன்ற பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவருகிறது இந்த மஞ்சள். மஞ்சளின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், நம்முடைய உடல் எடையை குறைக்க பேருதவி செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. பித்தத்தையும், உப்புசத்தையும் மஞ்சள் குறைக்கிறது.. காயங்களையும் வலிகளையும் போக்கக்கூடியது மஞ்சள்.. குறிப்பாக, கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் சிகிச்சையின் ஒரு பகுதியாகவே இந்த மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.

கல்லீரலுக்கும், சிறுநீரகங்களுக்கும் பாதுகாப்பு கவசமாய் உள்ளது.. உடலுள்ள நச்சுக்களை வெளியேறி, கொழுப்பையும் குறைக்கின்றது. முதுமையை தள்ளி நிறுத்தும் சக்தி கொண்டது மஞ்சள். அதிலும் பச்சை மஞ்சளில் குர்குமின் நிறையவே உள்ளது, பித்த உற்பத்தியை தூண்டி, ஜீரணத்துக்கும் உதவுகிறது.. இத்தனை நன்மைகள் இருந்தாலும், மஞ்சளை அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. காரணம், செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ரத்த மெலிப்பு மருந்துகள் எடுத்துகொள்பவர்கள், மஞ்சளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது.. அனீமியா பாதிப்பில் உள்ளவர்களுக்கு உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கும்.. மஞ்சளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது, இரும்புச்சத்து உலரதுவங்கிவிடும்.. இதன் காரணமாகவும், உடலில் சில பிரச்சனைகள் வரலாம். அதேபோல, ஆபரேஷன் செய்து கொள்பவர்கள் சிகிச்சைக்கு 2 வாரங்களுக்கு முன்பிருந்தே மஞ்சளை குறைப்பது அல்லது தவிர்ப்பது நல்லது.. ஏனென்றால், மஞ்சள் சிகிச்சையின்போது ரத்த உறைதலை தாமதப்படுத்தலாம். அதேபோல, ரத்த உறைதல் அல்லது ரத்த சர்க்கரை அளவையும் பாதிக்கலாம் என்பதால், குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும், டாக்டரின் ஆலோசனை பெறாமல், மஞ்சள் சப்ளிமெண்ட்ஸ் சாப்பிடக்கூடாது.