தீராத முதுகு வலிக்கு மூளை தான் காரணம் என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
எந்த பிரச்சினைக்கும் காரணகர்த்தாவை மூளை என்பார்கள். மனிதர்களுக்கு ஏற்படும் முதுகுவலி பிரச்சினை மூளையுடன் முடிச்சு போட்டு இருப்பது ஆராய்ச்சி மூலம் தெரியவந்து உள்ளது.
மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் முதுகுவலி ஏற்படுவதற்கு மூல காரணம் மூளை தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவெ முதுகு வலி தீர வேண்டும் என்றால் மூளைக்கு ஓய்வு கொடுங்கள்.
முதுகுவலி ஏற்பட காரணம் என்ன?
முதுகுவலிக்கு அடிப்படைக் காரணம், நீண்ட நேரம் இயற்கைக்கு மாறான நிலையில் உட்கார்ந்து அல்லது படுத்திருப்பதால் முதுகெலும்பில் ஏற்படும் அழுத்தம்மாகும். முதுகு வலி உங்கள் கீழ் முதுகில் மந்தமான வலிகள், குத்தும் வலி, உங்கள் கழுத்தில் விறைப்பு மற்றும் உங்கள் கால்கள் மற்றும் கால்களில் உணர்வின்மை போன்ற வடிவங்களில் ஏற்படலாம்.