ஆண் பெண் இருபாலரும் பருவ வயதில் இன உணர்வு கொள்வதும் திருமணம் செய்து கொள்வதும் திருமணம் செய்து கொள்வதும் இயற்கை நிகழ்வுகளேயாகும். இவற்றைப் பற்றி ஆண்களும் பெண்களும் வெட்கப்படவோ அருவருப்பு அடையவோ ஏதும் இல்லை.
இன உணர்ச்சி மேலோங்கி நின்று திருமணம் புரிய இயலாத நிலையில் சில சமயம் ஆண் பெண் இருபாலாரும் சட்டத்திற்கும் சமுதாய நியதிகளுக்கும் புறம்பான மறைமுக வாழ்வின் ஈடுபடுவதுண்டு திருமணமல்லாத ஒழுக்கமற்ற முறையை ஏற்படுத்திக் கொள்ளும் பாலுறவும் மிகவும் தவறாக முடிகின்றன.
பெண்ணானவள் தவறான வாழக்கையின் முடிவில் சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்கத் துணிவில்லாத இழிவான நிலையை அடைகின்றாள். தந்தையின் பெயரை அறிவிக்க இயலாத குழந்தைக்குத் தாயாகி பலவித துன்பங்களையும் அவள் அடைகிறாள்.
ஆனால் ஆண்மகன் பெண்களைப் போன்று இத்தகைய நிலைகளை அடையாது தப்பி விடுகிறான். எனினும் இந்த முறையற்ற வாழ்க்கை ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டு சோகச் சூழ் நிலைகளைச் சந்திக்கிறார்கள்.
பால்வினை நோய்கள் பெண்களால் மட்டுமே பரவுகின்றன என்ற தவறான கருத்து நிலவுகிறது. பால்வினை நோய்கள் ஆண். பெண் இருபாலாரையும் பீடிக்கின்றது உடலுறவின் மூலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கும். பெண்ணிடமிருந்து ஆணுக்கும் இவை பரவும்.
பால்வினை நோய்கள் கண்ணுக்குப் புலப்படாத மிக நுண்ணிய நோய்க் கிருமிகளால் ஏற்படுகின்றன. ஒவ்வொரு வகை நோய்க்கும் ஒவ்வொரு வகை விஷக்கிருமி காரணமாக உள்ளது டைஃபாய்டு, அம்மை போன்ற நோய்களைப்போல், பால்வினை நோய்களும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் தொற்றிக் கொள்ளும் இயல்புடையன.
டைஃபாய்டு, அம்மை போன்ற தொற்று நோய்கள் காற்று உணவு போன்றவற்றின் மூலம் பரவி அதன்மூலம் நோயாளிகளிடமிருந்து ஆரோக்கியமானவர்களைப் பீடிக்கின்றன. ஆனால் பால்வினை நோய்க் கிருமிகள் ஆணும் பெண்ணும் ஒன்று கூடி உடலுறவு கொள்வது ஒன்றினால் மட்டுமே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகின்றன. எனவேதான் ஒழுக்கமுறை பலவீனம் அடையும் பொழுதும். விபச்சாரம் சமூகத்தில் மேலோங்கி நிற்கும் பொழுதும் பால்வினை நோய்கள் பிளேக் அம்மை போன்ற பெருவாரியான நோய்கள் மக்களிடையே வேகமாகப் பரவத் தொடங்குகின்றன.
விபச்சாரத்தையே தொழிலாகக் கொண்ட பெண் ஒவ்வொருத்தியும் ஒரு சமயம் இல்லாவிடில் மற்றொரு சமயம் பால்வினை நோய்களால் கட்டாயம் பீடிக்கப்படுவாள் என்பது நிச்சயிக்கப்பட்ட உண்மை.
ஆரோக்கியமான வாலிபன் ஒருவன் விபசாரப் பெண்ணுடன் பாலுறவு கொண்டால் ஒரே சமயத்தில் மூன்று வகையான பால்வினை நோய்களுக்கு அவன் இலக்காகிறான்.
இந்த மூன்று நோய்களையும் அவன் மீண்டும் வேறொரு விபசாரப் பெண்ணுடன் உடலுறவு கொள்ளும்போது அந்தப் பெண்ணுக்கு திரும்பக் கொடுக்கலாம். அவள் அதை பிறகு வேறோருவருக்குப் பரப்பக் கூடும். இவ்வாறு விபசாரத்தின் மூலம் பால்வினை நோய்கள் பரவி சமுதாயத்தின் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன.
ஒழுக்கம் கெட்ட ஒர் ஆண் அல்லது பெண்ணுக்கு மட்டுமே உரியது என்று உறுதி செய்யப்பட்ட இப்பால்வினை நோய் குடும்பப் பெண்ணையும் தொற்றுவதுண்டு. கணவன் ஒரு விபசாரப் பெண்ணுடன் தொடர்பு கொள்வதால் நோயால் பீடிக்கப் பட்டு அதை ஏதுமறியாத தன் மனைவியின் உடலிலும் சேர்த்துவிடும் கொடுமை. குடும்பப் பெண்கள் பலரின் வாழ்வில் பல பிரசனைகளைத் தோற்றுவிக்கின்றன.
தன் நோயை வெளியே சொல்ல முடியாமலும். சிகிச்சை மேற்கொள்ளத் துணிச்சல் இல்லாமலும் தவிக்கும் தவிப்பு மிகவும் பரிதாபகரமானதாகும்.
கணவனின் தவறான நடத்தையினால் மனைவியும் பாதிக்கப்படுவதோடு மட்டும் நிற்பதில்லை. நோய் முற்றினால் பிறக்கும் குழந்தைகளையும் அதிக அளவில் பாதித்த விடக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. எனவே ஒழுக்கம் பற்றிய நினைவு மக்களிடையே அதிகமாக வாழ்க்கை நிலை சீர்திருத்தம் பெற வேண்டும் விபசாரம் அறவே ஒழிக்கப்பட வேண்டும். குடும்ப நலனை முன்னிட்டு ஆண்களும் விபசாரப் பெண்களுடனான தொடர்புகளை அறவே விலக்க வேண்டும்.