டான்சிலில் லேசர் மூலமாக ஆபரேஷன் செய்ய முடியுமா? இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
டான்சில் பிரச்சினையை லேசரால் சரி பண்ண முடியும். டான்சிலில் சீழ், கிருமிகள், வெளிப் பகுதியில் அதிகமாக இருக்கும். இதனால் டான்சிலை முழுமையாக, வெளியில் எடுக்காமல் சீழ், கிருமிகள் இருக்கிற வெளிப் பகுதிகளில் மட்டும் லேசர் வைத்து எடுக்க முடியும்.
இதனை லேசர் டான்சில் ஆபரேஷன் என்பார்கள். இதனால் நிறைய நன்மைகள் உள்ளன. ஒரு சொட்டு ரத்தம் கூட வீணாகாது. சாதாரண ஆபரேஷனில் ஏற்படும் வலியில் 10 மடங்கு குறைவானதாகவும், இருக்கும்.
லேசரால் ஏற்படும் புண் சீக்கிரமாக ஆறிவிடும். ஆபரேஷன் செய்த மணி நேரத்தில் நோயாளி திரும்பவும் தனது வேலைக்கு போக முடியும்.
என்டோஸ்கோப், மைக்ரோஸ்கோப் இல்லாமல், எந்த மாதிரியான சூழ்நிலையில் லேசர் மட்டுமே பயன்படுத்தி காது, மூக்கு தொண்டையில் ஆபரேஷன் செய்ய முடியும்?
தைராய்டு, பெரோடிட் மற்றும் கழுத்து கேன்சர் போன்ற நோயாளிகளுக்கு லேசர் பயன்படுத்தி ஆபரேஷன் செய்வதால் ரத்தம் கொஞ்சம் கூட வெளியே வராது. இது தைராய்டு, பெரோடிட்டுக்குள் இருக்கிற நோயை மொத்தமாக எடுப்பதற்கு வசதியாக இருக்கும். தைராய்டு, பெரோடிட்டுக்குள் இருக்கிற முக்கியமான நரம்புகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லாமல் நரம்பை பாதுகாக்க முடியும்.
கர்ப்பபை கட்டிகளை கண்டறிவது எப்படி?
மாதவிடாய் ஏற்படும் பொழுது மேலே கூறிய ஏதேனும் அறிகுறிகள் உண்டாகுமேயானால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
பின்னர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்தால் எந்த வகை பிரச்சினை இருந்தாலும் கண்டறியலாம். கட்டிகள் எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிந்து கொண்டு இதற்கான சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
குழந்தை பெறும் வயதில் கட்டிகள் வந்தால் அதை இடம் அறிந்து வீடியோ லேப்ராஸ்கோப்பி மூலமாக மூலமாக எளிதில் அகற்றி விடலாம்.
குழந்தைகள் பெற்றபின் உண்டாகும் கர்ப்பபை கட்டிகளை வீடியோலேப்ராஸ்கோப்பி மூலம் கர்ப்பபையையோ அல்லது கட்டிகளையோ எளிதில் அகற்றி விடலாம். லேசர் முறையை உபயோகித்தும் துல்லியமாக அகற்றிவிடலாம்.
மைக்ரோஸ்கோப்பிக் ஆபரேஷனில் லேசர் பயன்படுத்த முடியுமா?
மைக்ரோஸ் கோப்பிக் மூலமாக காதில் பண்ணுகிற ஆபரேஷனில் பயன்படுத்த முடியும். காது கேட்காமல் இருக்கிற நோயாளிகளுக்கு ஸ்டெபி டெக்டமி ஆபரேஷன் செய்யும் போது நடுக்காதுக்கும், உள்காதுக்கும் நடுவில் இருக்கிற ஸ்டேபீஸ் எலும்பில் 0.6 எம்.எம். அளவில் துளையிட்டு, உள் காதில் டெப்லான் பிஸ்டனை பொருத்த வேண்டும்.
இதனை லேசர் மூலமாக ரொம்ப துல்லியமாக செய்ய முடியும். காதில் சீழ் வருகிற நோயாளிகளுக்கு காது எலும்பின் (மாஸ்டாய்டு) உள்ளே இருக்கிற சதை, சீழ் போன்றவற்றை லேசர் மூலமாக குணப்படுத்த முடியும். இந்த ஆபரேஷன் மைக்ரோஸ் கோப் மூலமாக லேசர் பயன்படுத்திக் கொள்வதால் சுற்றி உள்ள முக்கியமான பகுதிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.
குரல் நாணின் மேல் உள்ள கட்டியை மைக்ரோஸ் கோப் மூலமாக பார்த்து லேசர் பயன்படுத்தி கரைக்க முடியும்
சைனஸ் நோய்களுக்கு என்டோஸ் கோப்பிக்-சைனஸ் சர்ஜரி செய்யும் போது லேசர் பயன்படுத்த முடியுமா?
சாதாரண என்டோஸ்கோப்பிக் சைனஸ் ஆபரேஷனில் சைனசின் உள் பகுதியில் சீழ் அல்லது சதை இருந்தால் அதற்கு காரணமான நோயை என்டோஸ்கோப் வழியாக கண்டுபிடித்து அந்த நோய்க்கான அடிப்படை பிரச்சினையை சரி செய்வதால் சைனஸ் பிரச்சினையை குணப்படுத்த முடியும்.
மூக்கினுள் சதை, பாலிப் இருந்தால் காதுக்கும், மூக்குக்கும் இடையில் உள்ள சைனஸ் துவாரத்தை அடைத்து விடும். இந்த மாதிரியான சதையை எடுப்பதற்கு டீ-பிரைடர் என்ற நவீன கருவியை பயன் படுத்துகிறோம். இந்த மாதிரி பிரச்சினைகளை கூட லேசர் வைத்து கரைக்கலாம். லேசர் வைத்து கரைப்பதால் இந்த நோயை எளிதில் சரி பண்ண முடியும்.
சில நோயாளிகளுக்கு மூக்கின் நடுப்பகுதி வளைந்து இருப்பதால் அல்லது எலும்பின் அளவு அதிகமாக இருப்பதால், மூக்கில் உள்ள சுவாச துவாரம், சைனஸ் துவாரம் அடை படுவதற்கு வாய்ப்பு உண்டு. இதனால் ஏற்படும் சைனஸ் நோயை குணப்படுத்த மூக்கின் நடுப்பகுதி எலும்பை சரிசெய்ய வேண்டும்.
இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு லேசர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது ரத்தம் அதிகமாக வந்தால் லேசர் பயன்படுத்தி ரத்தம் வெளிவருவதை தடுக்க முடியும்.
காது, மூக்கு, தொண்டையில் உள்ள எந்தெந்த பிரச்சினைகளுக்கு என்டோஸ் கோப் பயன்படுத்தி லேசர் மூலமாக சிகிச்சை அளிக்க முடியும்?
முக்கியமாக குரல் வளையில் உள்ள குரல் நாண்களின் மேல்கட்டி அல்லது வீக்கம் வருவதால் சில பாடகர்கள், ஆசிரியர்கள் மற்றும் குரலை அதிகமாய் பயன் படுத்துபவர்கள் பாடுவதற்கும், பேசுவதற்கும், மிகவும் கஷ்டப்படுவார்கள். இந்த மாதிரியான நோயாளிகளுக்கு குரல் நாணின் மேல் உள்ள வியாதியை என்டோஸ்கோப் மூலமாக கண்டுபிடித்து என்டோஸ்கோப்பில் உள்ள சேனல் வழியாக லேசர் புரோப்பை உள்ளே அனுப்பி அந்த நோயை லேசர் சக்தி மூலம் குணப்படுத்த முடியும்.
லேசர் பயன்படுத்துவதால் நோய் பாதித்த இடத்தை சுற்றி உள்ள பகுதிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் நோயை மட்டும் குணப்படுத்த முடியும்.
சாதாரண ஆபரேஷன் செய்தால் குரல் ரொம்ப இறுகிப்போகும் வாய்ப்பு உண்டு. ஆனால் லேசர் ஆபரேஷனில் தொண்டை இறுகிப் போவதற்கான வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும்.
மயக்கம் கொடுக்காமலே வெளியில் ஆபரேஷன் செய்தால், மணி நேரத்திலேயே அந்த நோயாளிகள் அவரவர் வேலையை செய்ய முடியும். பிரச்சினையானது வெகு சீக்கிரமே குணமாகி விடும். ஒரு வாரத்திலேயே குரல் இயல்பான நிலையை அடைந்து விடும்.
மூச்சு குழாய், உணவுக்குழாய்களில் கட்டி இருந்தால், அதனை அறுவை சிகிச்சை எதுவும் செய்யாமல் என் டோஸ்கோப் மூலமாக லேசர் பயன்படுத்தி கட்டியை கரைத்து விடலாம். இப்படி செய்வதால் நோயாளி சீக்கிரமாக மூச்சு வாங்குவதற்கு வசதியாக இருப்பதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளியை சீக்கிரமாக குணப் படுத்தி, உயிரை காப்பாற்ற முடியும்.
இந்த மாதிரி வியாதி உள்ள நோயாளிகளுக்கு சிலர் சாதாரண அறுவை சிகிச்சை செய்ய முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு மயக்கம் கொடுக்காமல், ரத்தம் வீணாகாமல் லேசர் ஆபரேஷன் செய்ய முடியும்!
மிகவும் கஷ்டமான நோயாளிகளுக்கு கூட ஆபரேஷனை மிகவும் சுலபமாக செய்ய முடியும். மூக்கினுள் வளர்கிற சதை, பாலிப், கேன்சர், ரத்தக்கட்டி, போன்ற பிரச்சினைகளுக்கு லேசர் பயன்படுத்தி ஆபரேஷன் செய்வதால் நோயாளிக்கு எந்தவித கஷ்டமும் இல்லாமல் குணப்படுத்த முடியும்.
என்டோஸ்கோப் பயன்படுத்தி மூக்கு துவாரம் வழியாக ஆபரேஷன் செய்ய முடியும்.
ஒரு ஆபரேஷன் செய்வதற்கு லேசரை எப்படி பயன்படுத்த முடியும்?
சாதாரண ஆபரேஷனில் ஒரு பகுதியை சரி பண்ண வேண்டும் அல்லது எடுக்க வேண்டும் என்றால், அந்த பகுதியை சுற்றி உள்ள சதையை கத்தி அல்லது கத்தரிக்கோல் வைத்து அறுத்துத்தான் எடுக்க வேண்டி இருக்கும்.
ஆனால் லேசரில் கத்தி, கத்தரிக் கோல் இல்லாமல் லேசர் பீம் மூலமாக லேசர் சக்தியை பயன்படுத்தி சில முக்கியமான ஆபரேஷன்களை கஷ்டம் இல்லாமல் எந்தவித ஆபத்தும் இல்லாமல் செய்ய முடியும். சில இடத்தில் என்டோஸ்கோப் வழியாக உடலில் செலுத்தி உள்ளே இருக்கிற நோயை லேசர் புரோப் பயன்படுத்தி ஆபரேஷன் பண்ண முடியும்.