நடிகை குஷ்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போட்டோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை குஷ்பு. மும்பையை பூர்விகமாக கொண்ட குஷ்பு பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். தொடர்ந்து பாலிவுட்டில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த நடிகை குஷ்பு தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். தொடர்ந்து 1980 மற்றும் 90களில் டாப் நடிகையாக வலம் வந்த குஷ்பு, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் குஷ்பு. தற்போதும் சினிமாவில் கலக்கி வரும் குஷ்பு, சின்னத்திரையிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
அரசியல் பிரமுகராகவும் வலம் வரும் குஷ்பு, கடந்த சில நாட்களகாக அதிகளவு எடையை குறைத்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சிக்கென மாறியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள குஷ்பு தொடர்ந்து தனது போட்டோக்களை ஷேர் செய்து திணறடித்து வருகிறார். சமீபத்தில் லண்டன் சென்ற குஷ்பு அங்கிருந்தும் போட்டோக்களை ஷேர் செய்து வந்தார்.
இந்நிலையில் நடிகை குஷ்பு ஷேர் செய்துள்ள போட்டோ ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வரும் போட்டோவை வெளியிட்டுள்ளார் குஷ்பு.
கையில் ட்ரிப்ஸ் செலுத்தப்பட்டுள்ள நிலையில் ரொம்பவே சோர்வாக உள்ளார் நடிகை குஷ்பு. மேலும் அந்த போட்டோவுக்கு, முதுகு தண்டுவடப் பகுதிக்கு கீழ் மிகவும் வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது வீட்டிற்கு திரும்பி விட்டதாகவும் இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பிறகு பணிக்கு திரும்புவேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த போட்டோவில் பார்க்கவே பரிதாபமாக உள்ளார் குஷ்பு, இதனை பார்த்த ரசிகர்கள் பதறியுள்ளனர். நடிகை குஷ்பு விரைவில் நலம்பெற வேண்டும் என கூறியுள்ள ரசிகர்கள், அவர் விரைவில் குணமாக பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.