தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா லோகேஷ் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தை ரத்னகுமார் இயக்க ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடிக்கின்றார் நயன்தாரா.
ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து 20 வருடங்களாக பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கின்றார். ஆனால் சமீபகாலமாக நயன்தாராவிற்கு நேரம் சரியில்லை போல. தொடர்ந்து சரிவை தான் சந்தித்து வருகின்றார் நயன்தாரா. தான் பல வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார். அட்லீ இயக்கும் பாலிவுட் படமாக ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார் நயன்தாரா. இதன் மூலம் பாலிவுட் திரையுலகில் நயன்தாரா அறிமுகமாகிறார். இதையடுத்து நயன்தாரா நடிப்பில் வெளியான சமீபத்திய திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன. மேலும் அவர் நடிப்பதாக இருந்த இரு படங்களின் வாய்ப்பு அவர் கை நழுவி போனது. இது போதாது என அவரின் கணவர் விக்னேஷ் சிவனுக்கும் அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு பறிபோனது.
இப்படி இருக்கையில் நயன்தாரா தன் சம்பளத்தை பலமடங்கு குறைத்துள்ளாராம். இயக்குனர் லோகேஷ் தயாரிக்கும் படத்தில் ரத்னகுமாரின் இயக்கத்தில் ராகவா லாரன்ஸின் ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்காக நயன்தாரா தன் சம்பளத்தை கணிசமாக குறைத்துள்ளாராம். மேலும் விஜய், அஜித், ரஜினி என உச்ச நட்சத்திரங்களின் ஜோடியாக நடித்த நயன்தாரா அடுத்தகட்ட நடிகரான லாரன்சுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இதற்கு அவரின் மார்க்கெட் சற்று சரிந்ததே காரணம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.