முதலமைச்சர் பதவி என்பது மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்: ரஜினிகாந்த்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் ஒன்றுதான். படிப்படியாக தனது வாழ்க்கையில் உயர்ந்து வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று ரஜினிகாந்த் கூறினார்.

ரஜினியுடன் நடிகர் யோகி பாபுவும், கண்காட்சியை பார்வையிட வந்திருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை தினமும் ஏராளமானோர் பார்த்து வருகிறார்கள். கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள் என்று பலரும் பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலையில் ரஜினிகாந்த் இந்த புகைப்படக் கண்காட்சியைப் பார்த்து ரசித்தார். ரஜினிக்கு கண்காட்சியை சுற்றிக் காண்பித்த அமைச்சர் சேகர்பாபுவிடம் புகைப்படங்கள் குறித்து விளக்கம் கேட்டுக் கொண்டே வந்தார் ரஜினிகாந்த். இந்த கண்காட்சி பற்றி ரஜினிகாந்த் கூறியதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கைப் பயணம் கிட்டதட்ட 54 வருடங்கள் கட்சியில் உழைத்து படிப்படியாக முன்னேறி பல பதவிகளை வகித்து தற்போது முதலமைச்சராக இருக்கிறார் என்று சொன்னால் அது மக்கள் அவரது உழைப்புக்குக் கொடுத்த அங்கீகாரம். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். முதலமைச்சருடனான நினைவுகள் நிறைய இருக்கிறது. அதை நேரம் வரும்போது சொல்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

ரஜினியுடன் நடிகர் யோகி பாபுவும், கண்காட்சியை பார்வையிட வந்திருந்தார். அப்போது பூச்சி முருகன் உடன் இருந்தார். புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் தனது கருத்தை எழுத்து மூலம் நடிகர் ரஜினிகாந்த் பதிவு செய்தார்.