தங்கலான் படத்தில் விக்ரமின் டெடிகேஷன் குறித்தும் ஞானவேல் ராஜா தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டுள்ளார். இந்தப் படத்திற்காக 35 கிலோ வரையில் தன்னுடைய எடையை விக்ரம் குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் தங்கலான். இந்தப் படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். கோலார் தங்கவயல் பகுதியை சேர்ந்த மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு பீரியட் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் இந்தப் படத்தில் காணப்படுகிறார். தங்கலான் படத்தை ஸ்டூடியோ கிரின் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில் தற்போது கோலார் தங்கவயலில் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் படக்குழு தற்போது அப்டேட் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கப்படும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் படம் ரிலீசாகவுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு அப்டேட் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தப்படம் குறித்த அப்டேட்டை ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை எத்தனை மொழிகளில் மொழிப்பெயர்க்க முடியுமோ அத்தனை மொழிகளில் மொழிப்பெயர்க்க உள்ளதாகவும், படத்தை பார்க்காத மக்கள் இல்லை என்றும் அளவில் பல மொழிகளில் டப் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உலகப்படமாக இந்தப் படத்தை மாற்ற உள்ளதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். கோலார் தங்கச்சுரங்கத்தில் சுதந்திரத்திற்கு முன்பு பணியாற்றிய தமிழ் மக்களை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தன்னுடைய பேட்டியில் படத்தில் விக்ரமின் டெடிகேஷன் குறித்தும் ஞானவேல் ராஜா தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டுள்ளார். இந்தப் படத்திற்காக 35 கிலோ வரையில் தன்னுடைய எடையை விக்ரம் குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலக அளவில் தங்கலான் படம் முக்கியமான படமாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தப்படம் நம் அனைவரையும் பெருமை கொள்ள செய்யும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.