நடிகை ஐஸ்வர்யா மேனன் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு சித்தார்த்த், அமலா பால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதனைத் தொடர்ந்து ‘ஆப்பிள் பெண்ணே’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார் இவர். ஐஸ்வர்யா மேனன் தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு அகில உலக சூப்பர்ஸ்டார் நடிப்பில் சி.எஸ். அமுதன் இயக்கிய ‘தமிழ்ப்படம் 2’ படத்தில் நாயகியாக நடித்தார் ஐஸ்வர்யா மேனன். அதனைத் தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடித்த ‘நான் சிரித்தால்’ படத்தில் நாயகியாக நடித்தார்.
படங்களில் நடிப்பதை காட்டிலும் சோஷியல் மீடியா பக்கங்களில் பகிரும் கிளாமர் புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஐஸ்வர்யா மேனன். இவர் பகிரும் விதவிதமான ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவிப்பது வழக்கம். இந்நிலையில் இவர் தீபிகா படுகோன் உடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ப்ராஜெக்ட் கே படத்திற்காக ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கும் தீபிகாவுடன் செல்பி புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் ஹைலைட்டாக இந்த போட்டோவிற்கு ‘நான் ஒரு பெண்ணை காதலித்த தருணம். ஐ லவ் யூ தீபிகா படுகோனே’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுதான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.