கீர்த்தி சுரேஷுக்கு அழகோடு அறிவும் இருக்கிறது: கமல்ஹாசன்!

மாமன்னன் படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு அழகோடு அறிவும் இருக்கிறது என்று பாராட்டி பேசியிருக்கிறார் உலக நாயகன் கமல் ஹாசன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் மாமன்னன். சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டரங்கில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் உலக நாயகன் கமல் ஹாசன் கலந்து கொண்டு பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய கமல் ஹாசன் கீர்த்தி சுரேஷை பாராட்டினார். அழகோடு அறிவும் உள்ளவர் கீர்த்தி சுரேஷ் என்றார் கமல். மாமன்னன் படத்தை தேர்வு செய்ததற்காக கீர்த்தியை அப்படி பாராட்டினார் கமல் என்று கூறப்படுகிறது.

மாமன்னன் படத்தை கமல் ஹாசனுக்கு போட்டுக் காட்டியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். படம் பார்த்த கமல் அது பற்றி கூறியிருப்பதாவது:-

மாமன்னன் படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம். அரசியல் த்ரில்லராக உருவாகியிருக்கும் அந்த படத்தை பற்றி பேச நிறைய விஷயங்கள் இருக்கிறது. அடுத்தவர்களும் கருத்து தெரிவிக்க இடம் கொடுப்பார் மாரி செல்வராஜ். அது தான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. படம் நன்றாக இருக்க வேண்டும் என மக்கள் நினைப்பார்கள். ஆனால் நான் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டதால் அது வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறேன். அதுவே என் ஆசை என்றார்.