நயன்தாராவுடன் லாங் டிரைவ் செல்ல வேண்டும்: ஆர்யா

தன்னுடன் சேர்ந்து நடித்த நயன்தாரா பற்றிய ரகசியம் ஒன்றை கூறியிருக்கிறார் ஆர்யா.

நயன்தாராவும், ஆர்யாவும் சேர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்தார்கள். நயன்தாராவுக்கும், ஆர்யாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக அப்பொழுது பேச்சாக இருந்தது. அவர்கள் லிவ் இன் முறைப்படி வாழ்ந்ததாகவும் பேசப்பட்டது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் நயன்தாரா பற்றி பேசியிருக்கிறார் ஆர்யா. மேலும் நயன்தாரா பற்றிய ஒரு ரகசியத்தையும் கூறியிருக்கிறார்.

ஆர்யா நடித்த காதர்பாட்தா என்ற முத்துராமலிங்கம் படம் அண்மையில் வெளியானது. அந்த படத்தை விளம்பரம் செய்ய பேட்டிகள் கொடுத்தார் ஆர்யா. அதில் ஒரு பேட்டியில் எந்த நடிகையுடன் சேர்ந்து காரில் நெடுந்தூரம் டிரைவ் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆர்யாவோ நயன்தாராவுடன் லாங் டிரைவ் செல்ல வேண்டும் என பதில் அளித்தார்.

ஆர்யா மேலும் கூறியதாவது, நயன்தாராவுடன் டிரைவ் போனால் நாம் தான் கார் ஓட்ட வேண்டும். அவருக்கு கார் ஓட்டத் தெரியாது என்றார். நயன்தாதராவுக்கு டிரைவிங் தெரியாது என்கிற ரகசியத்தை ஆர்யா கூறினார். ஆனால் அதை நம்ப முடியவில்லையே என்கிறார்கள் ரசிகர்கள். அப்போ படங்களில் தலைவி கெத்தாக கார் ஓட்டியது எல்லாம் சும்மாவா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆர்யாவும், நயன்தாராவும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அதனால் தான் லாங் டிரைவ் என்றதும் நயன்தாராவின் பெயரை சொல்லியிருக்கிறார். இதற்கிடையே நயன்தாராவுக்கு முதலில் டிரைவிங் கற்றுக் கொடுங்கள் அன்பான இயக்குநரே என நயன்தாரா ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.