‘லியோ’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நான் ரெடி’ வெளியாகியது!

விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நான் ரெடி’ வெளியாகி, அவரது ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ‘லியோ’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான இன்று சரியாக 12 மணிக்கு லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான “அல்டர் ஈகோ நா ரெடி” பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இப்பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டுள்ளது.இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். பாடல் வீடியோவில் உற்சாகமாக நடனம் ஆடும் விஜய்யை சுற்றி இளைஞர்களும் நடனமாடும் காட்சிகள் சில இடம்பெற்றுள்ளன. தற்போது விஜய்யின் ’நான் ரெடி’ பாடலை அவரது ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.