தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பீரியட் பிலிமாக உருவாகி வரும் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். அந்த வகையில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கான பிணங்களுக்கு நடுவில் மிஷின் கன்னுடன் இரத்தம் வலிய மிரட்டலான லுக்குடன் தனுஷ் நிற்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வெறித்தனமான போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.