தேவையில்லாத கேள்வியை என்னிடம் கேட்காதீங்க என்று நடிகை வனிதா விஜயகுமார் செய்தியாளரிடம் கொந்தளித்தார்.
வசந்த பாலன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி உள்ள திரைப்படம் அநீதி. அர்பன் பாய்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமிழில் அநீதி என்றும், தெலுங்கில் இப்படதிற்கு பிளட் அண்டு சாக்லேட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஜூலை 21 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அநீதி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குநர் வசந்த பாலன், அர்ஜூன் தாஸ், துஷாரா, வனிதா விஜயகுமார் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய வனிதா, தமிழ் திரை உலகின் ஷாருக்கான் என்று அர்ஜுன் தாஸை வெகுவாக புகழ்ந்து இருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் வனிதா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், அநீதி ஒரு அருமையான த்ரில்லர் திரைப்படம், படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ட்விஸ்ட் பயங்கரமா இருக்கு. ஜூலை 21ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்தை திரையில் பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என்றார்.
இதையடுத்து செய்தியாளர் கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்தது குறித்து கேள்வி எழுப்பினார். நிருபரின் இந்த கேள்வியால் கடுப்பான வனிதா விஜயகுமார், நான் ஒண்ணும் அரசியல்வாதி இல்லை, கமலின் நடிப்பு பற்றி, இந்த படத்தை பற்றி கேளுங்க பதில் சொல்கிறேன். அரசியல் பற்றி கேள்வி கேட்டு என்னை இதில் இழுத்துவிடாதீங்க. கமலை பற்றி பேச நான் இங்கு வரல, இது ரொம்ப தப்பான கேள்வி என்று வனிதா செய்தியாளரிடம் கொந்தளித்தார்.