அதிதி தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்: இயக்குனர் ஷங்கர்

சிவகார்த்திகேயன், அதிதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாவீரன்’ படம் குறித்து இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் ரிலீசாகியுள்ள இந்தப்படத்திற்கு பல தரப்பிலிருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. வசூலிலும் மாவீரன் படம் மாஸ் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘மாவீரன்’ படம் குறித்து இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மாவீரன் அற்புதமாக எழுதப்பட்ட மடோன் அஸ்வினின் புத்திசாலித்தனம். கிளாஸ் மாஸ் என்டர்டெய்னர். திரைக்கதைக்குள் உள்ள அற்புதமான நகைச்சுவை உணர்வு ரசிக்கும்படி உள்ளது. சிவகார்த்திகேயன் பாராட்டுக்குரிய நடிப்பினை வழங்கியுள்ளார். அதிதி தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். சரிதா, யோகி பாபு மற்றும் மிஷ்கின் ஆகியோர் அருமையாக நடித்துள்ளனர். ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அதனை உருவாக்குய விதம் கவனம் ஈர்க்கிறது. இந்தப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நிச்சயமாக குடும்பத்துடன் ரசிக்க கூதிய புது அனுபவமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.