நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவுக்கு விரைவில் திருமணம்?

நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் நாயகியான ராதாவின் மூத்த மகள் கார்த்திகா. இவர், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘கோ’படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘அன்னக்கொடி’, எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய ‘புறம்போக்கு’ படங்களில் நடித்தார். சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ள இவர், இந்தியில் ‘ஆரம்ப்’ என்ற சின்னத்திரை தொடரிலும் நடித்தார். பின்னர் நடிப்பில் இருந்து விலகி, தனது தந்தையுடன் பிஸினஸை கவனித்து வந்த கார்த்திகா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை கார்த்திகா தனது சமூக வலைத்தளத்தில் மோதிரம் அணிந்து இளைஞர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார். இதனால் அவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. வருங்கால கணவர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.