லியோ வெற்றி விழா: விண்ணப்பத்தை நிராகரித்த நேரு விளையாட்டரங்க அதிகாரிகள்!

லியோ வெற்றி விழா கொண்டாட்டம் தொடர்பான விண்ணப்பத்தை நிராகரித்த நேரு உள் விளையாட்டு அரங்க அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

விஜய் நடித்த லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை அனிருத், இயக்கம் லோகேஷ் கனகராஜ். இந்த படம் வெளியிடுவதற்கு முன்பே இசை வெளியீட்டு விழா நடத்த உத்தேசிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்த விழா ரத்து செய்யப்பட்டது. இதை தயாரிப்பு நிறுவனமே ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் நிலவரம் குறித்த கேள்விகள் எழுந்தன. அதில் ரூ 1000 கோடி வசூல் என ரசிகர்கள் போஸ்டர் எழுதி ஒட்ட செவன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தலைவர் லலித்குமாரோ 7 நாட்களில் லியோ 461 கோடி ரூபாய் வசூலை குவித்தது என அறிவித்தார். இந்த நிலையில் இதை விஜய் ரசிகர்கள் டிரென்ட்டாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவை கொண்டாட படத்தயாரிப்பு குழு முடிவு செய்துள்ளது. அதன்படி லலித்குமார் பெரியமேடு காவல் நிலையத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் லியோ படத்தின் வெற்றி விழாவை வரும் நவம்பர் 1 ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் கொண்டாட இருக்கிறோம். விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார். எனவே பாதுகாப்பு வழங்குமாறு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி காவல் துறையும் கடிதம் எழுதியுள்ளது. அதன்படி எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடியும், எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன, காவல் துறை பாதுகாப்பு இல்லாமல் தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? முக்கிய விருந்தினர்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள்? விழாவுக்கு 5000 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என காவல் துறை கேள்விகளை எழுப்பி சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இந்த கடிதம் காவல் துறையின் பரிசீலனையில் உள்ள நிலையில் லியோ வெற்றி விழா கொண்டாட்டத்திற்கான விண்ணப்பத்தை நேரு உள்விளையாட்டரங்க அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

விண்ணப்பக் கடிதத்தை தயாரிப்பு நிறுவனம் நேரில் சென்று அளித்ததாம். அப்படி செய்யக் கூடாதாம். இமெயிலில்தான் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டுமாம். நேரு விளையாட்டு அரங்கின் விதிகளின் படி நிகழ்ச்சி நடத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டுமாம். ஆனால் லியோ படத் தயாரிப்பு நிறுவனம் 3 நாட்களுக்கு முன்பாகத் தான் நிகழ்ச்சிக்காக விண்ணப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் இமெயிலில் மீண்டும் விண்ணப்பித்துள்ளது.