கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. நவம்பர் 10 முதல் 15ஆம் தேதிவரை 5 காட்சிகளுக்கு படத்தை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்துக்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி நவம்பர் 10 முதல் 20ஆம் தேதிவரை 10 நாள்களுக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், நவ. 10 முதல் 15ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு நாளுக்கு அதிகபட்சம் 5 காட்சிகளுக்கு திரையிடலாம். அனைத்து திரையரங்குகளிலும் காலை 9 மணிக்கு முதல்காட்சி தொடங்கப்பட வேண்டும். முன்னிரவு 1.30 மணிக்குள் இறுதிக்காட்சியை முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் நவம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தில், அனு இமானுவேல் நாயகியாக நடித்துள்ளார். ஜப்பான் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘டச்சிங் டச்சிங்’ வீடியோ பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியானது குறிப்பிடத்தக்கது.