நயன்தாரா பிறந்தநாள்: மகன்களுடன் போட்டோ போட்ட விக்னேஷ் சிவன்!

நடிகை நயன்தாரா இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என தமிழ்நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களே கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்த நயன்தாரா இந்தியளவில் பிரபலமாகி உள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நிலையில், உயிர் மற்றும் உலகம் என ட்வின்ஸ் ஆண் குழந்தைகளுக்கு அம்மாவாகி உள்ளார்.

நடிகை நயன்தாராவை நானும் ரவுடி தான் படத்தில் இருந்தே தங்கம் என அழைத்து வரும் விக்னேஷ் சிவன் இன்று தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டும் ஹேப்பி பர்த்டே தங்கமே என பதிவிட்டு தனது மனைவி மற்றும் மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா, பிசினஸ் மற்றும் குடும்பம் என அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் லேடி சூப்பர்ஸ்டார் சமீப காலமாக சோஷியல் மீடியாவிலும் இணைந்து ரசிகர்களுடன் கனெக்ட்டில் உள்ளார்.