ஸ்ருதி ஹாசனின் திறமையால் வியந்துபோன பார்த்திபன்!

இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் இப்போது அவரது புதிய படத்தின் வேலையில் படு பிஸியாக இருக்கிறார். படத்தின் திரைக்கதை, பாடல் வரிகள், இசையமைப்பாளர், பாடகர் என அடுத்த படத்தின் படக்குழுவினருடன் மிகுந்த ஊக்கத்துடன் வேலையாற்றி வருகிறார். இந்நிலையில், ஸ்ருதி ஹாஸன் குறித்து புகழ்ந்து தள்ளியிருக்கிறார் பார்த்திபன்.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் அவரது திறமையை வெளிக்காட்டி பலதரப்பட்ட மக்களை கவர்ந்தவர் பார்த்திபன். தொடர்ந்து படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார் இவர். உலகநாயகன் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகர் பார்த்திபன் என்றால் அது மிகையாகாது. அவரே கூட பல இடங்களில் ஆண்டவரைப் பற்றி பேசி இருக்கிறார். நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் பொன்னியின் செல்வனின் முதல் மற்றும் இரண்டாவது பாகத்தில் சின்ன பழுவேட்டரையர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இரவின் நிழல் திரைப்படம் ஒரு எக்ஸ்பிரிமெண்டல் படம் ஆகும். இந்த படத்தின் தரத்திற்காக மற்றும் படத்திற்கு பார்த்திபன் மற்றும் பட குழுவினர் இட்ட மெனக்கிடல்களுக்காக பலரின் பாராட்டுக்களை பெற்றது.

இயக்குனர் பார்த்திபன் இப்போது அவரது அடுத்த படத்தின் வேலையை தொடங்கி இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பார்த்திபன் அவரின் புது படம் குறித்த தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் பார்த்திபனின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார் என்னும் தகவல் வெளியானது. மேலும் பார்த்திபனின் இந்த புதிய படத்திற்கு உலக நாயகனின் மகளும் நடிகையும் பாடகியுமான ஸ்ருஹாசன் ஒரு பாடலை பாடுவதாக பார்த்திபன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். ஸ்ருதிஹாசனை சந்தித்த தருணம் மற்றும் ஸ்ருதிஹாசன் பேசிய விஷயங்களை தொகுத்து அவரது பாணியில் கேப்ஷனிட்டு அவர் பதிவிட்ட வீடியோ எக்ஸ் தளத்தில் மிகவும் வைரலானது.

இந்நிலையில் ஸ்ருதிஹாசனுடன் அவர் எடுத்துக் கொண்ட இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு ஸ்ருதிஹாசனை புகழ்ந்து பாராட்டியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த பதிவில் உலகநாயகன் கமல்ஹாசன் குறித்து குறிப்பிருக்கிறார் பார்த்திபன். பின்னர் ஸ்ருதிஹாசன் அவரது புது படத்தில் ஒரு பாடலை பாடியதைப் பற்றியும் பேசி இருந்தார். ஸ்ருதிஹாசனிடம் இருக்கும் அலாதியான திறமையை கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் பார்த்திபன் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். நடனம் பாட்டு நடிப்பு என தந்தையைப் போலவே அனைத்திலும் திறமை வாய்ந்தவராக இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டவர், ஸ்ருதி கமலின் மகள் என தெரிந்ததால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என உணர்ந்ததாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.