தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘விடுதலை’ இந்தத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் இந்தப் படத்தை தயாரித்து இருந்தார்.
‘விடுதலை 1’ வெளியானதில் இருந்து உலகளவில் பார்வையாளர்களின் கவனத்தைப் இந்தப்படம் பெற்றது. ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்த படம் ஏராளமான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஜனவரி 31 அன்று நடைபெற இருக்கும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை’ திரையிடப்படத் தேர்வாகி இருக்கிறது. இப்போது இந்தப்படம் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.
புனேவில் நடைபெற்ற, புனே சர்வதேச திரைப்பட விழா (PIFF) 2024-ல் சிறப்புத் திரையிடலின் போது ’விடுதலை1’ சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இது படக்குழுவினரையும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வருடம் கோடை விடுமுறையில் ’விடுதலை படத்தின் 2ம் பாகத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதனை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.