ஜப்பானில் ராஷ்மிகாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிற்காக டோக்கியோ சென்றுள்ள ராஷ்மிகா மந்தனாவுக்கு விமான நிலையத்தில் வைத்து ரசிகர்கள் இன்பதிர்ச்சி ஒன்றை அளித்துள்ளனர்.

தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார் ராஷ்மிகா. பான் இந்தியா நடிகையாகவும் பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையில் பொது நிகழ்ச்சி, விருது வழங்கும் விழா உள்ளிட்டவைக்ளிலும் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் ஒரு விருது வழங்கும் விழாவிற்கு சென்ற போதுதான் ராஷ்மிகா மந்தனாவுக்கு இன்பதிர்ச்சி கிடைத்துள்ளது.

அதாவது, டோக்கியோவில் எட்டாவது க்ரஞ்சி ரோல் அனிமி விருது விழா நாளை நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்று விருது வழங்கவுள்ளார் தமன்னா. இதற்காக டோக்கியோ சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர் ரசிகர்கள். டோக்கியோ விமான நிலையத்தில், ரசிகர்கள் ‘புஷ்பா’ படத்தில் ராஷ்மிகா நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தின் புகைப்படங்களுடன் நின்று அவரை வரவேற்று உள்ளனர்.

இந்த எதிர்பாராத வரவேற்பால் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இது சம்பந்தமான போட்டோஸ் மற்றும் வீடியோஸ் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் ஜப்பானிலும் ராஷ்மிகாவுக்கு ரசிகர்கள் உள்ளது இந்த வீடியோ மூலமாக உறுதியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் நேஷனல் கிரஸ் என குறிப்பிட்டு இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடைசியாக ‘அனிமல்’ படம் ரிலீஸ் ஆகி இருந்தது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான இப்படத்தின் ரன்பீர் சிங் ஜோடியாக நடித்திருந்தார். ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்களை இப்படம் குவித்தது. இது மாதிரியான கதைக்களத்தில் ராஷ்மிகா மந்தனா ஏன் நடித்தார் என அவரின் ரசிகர்களே அப்செட் ஆனார்கள். இதையெல்லாம் தாண்டி ‘அனிமல்’ படம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது.