நம்முடைய உடம்புக்கு மிக முக்கியமான உறுப்பு எது என்றால் அது நம்முடைய லிவர் தான். நம்முடைய லிவர் நன்றாக இருந்தால், நம்முடைய மொத்த உடலும் நன்றாக இருக்கும் என்று நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் லிவர் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-
நம்முடைய உடம்புக்கு மிக முக்கியமான உறுப்பு எது என்றால் அது நம்முடைய லிவர் தான்.. அது நிறைய பேருக்கு தெரியுமோ.. தெரியாதோ என்று தெரியவில்லை.. ஆனால் நம்முடைய லிவர் நன்றாக இருந்தால், நம்முடைய மொத்த உடலும் நன்றாக இருக்கும்.. லிவர் மற்றும் நன்றாக இல்லை என்றால் ஒவ்வொரு உறுப்பாக பாதிக்கப்படும்.. லிவர் உடன் எல்லா உறுப்புகளும் இணைந்துள்ளன..
நம்முடைய உடம்பு ரொம்ப அற்புதமான விஷயம்.. அதை நாம் ஒழுங்காக பார்த்துக் கொண்டோம் என்றால், அது நம்மை பார்த்து கொள்ளும். நாம் என்ன செய்கிறோம்.. காலையில் எழுந்தது முதல் நிறைய விஷயங்களை செய்கிறோம்.. மது அருந்துகிறோம்.. இஷ்டத்திற்கு சாப்பிடுகிறோம்.. ஆனால் ஏதாவது வந்தால் தான்.. அய்யய்யோ.. நம்ம உடம்புக்குள் என்னமோ நடக்கிறது என்று நினைத்து, நாம் பீதியான மனநிலைக்கு போகிறோம்..
நாம் லிவரை பற்றி பேசுவோம்.. நிறைய பேர் இதை பற்றி பேசலாம்.. லிவர் கேன்சரை பற்றி பேசலாம்.. அடிப்படையில் பேச வேண்டியது ஃபேட்டி லிவரை (fatty liver ) பற்றி தான்.. ஒரு காலத்தில் ஃபேட்டி லிவரத்தை பற்றி பேச வேண்டும் என்றால் .. ஆல்ஹகால் சாப்பிட்டால் தான் ஃபேட்டி லிவர் (fatty liver ) வரும் நினைத்திருப்போம்.. ஆனால் குடியையும் மீறி ஃபேட்டி லிவர் (fatty liver ) வருகிறது. அது எப்படி என்றால், நான் ஆல்ஹகாலிக் ஃபேட்டி லிவர் ( non alcoholic fatty liver ) வருகிறது. நான் ஆல்ஹகாலிக் ஃபேட்டி லிவர் என்றால் எப்படி வருகிறது என்றால், நாம் சாப்பிடும் சாப்பாடு, நாம் வாழ்க்கை முறை.. அதாவது நாம் எப்படி வாழ்கிறோம்.. இது எல்லாமே சேர்ந்து நமது லிவரை fatty liver ஆக மாற்றுகிறது..
சாப்பாட்டு முறை காரணம் என்றால்.. நாம் இப்போது அதிகமாக உட்கார ஆரம்பித்துவிட்டோம்.. கையில் மொபைலை வைத்துக் கொண்டு உட்கார ஆரம்பித்துவிட்டோம்.. காலையில் முதலில் எழுந்த உடன் மொபைலைத்தான் பார்க்கிறோம்.. ராத்திரி தூங்கும் போதும் மொபைல் தான் பார்க்கிறோம்.. அதையே திரும்ப திரும்ப தினமும் செய்கிறார்கள்.. வேறு எதுவும் செய்வது இல்லை.. அதற்கு அப்புறம் வேலைக்கு செல்கிறோம்.. வேலைக்கு சென்றால் அங்கு உட்கார்ந்து கொண்டே இருக்கிறோம்.. எங்கே போனாலும் நாம் உட்கார்ந்து கொண்டே இருக்கிறோம்.. இப்படி இருந்தால் fatty liver வருவதை எப்படி தடுக்க முடியும்..
fatty liver வருவதை தடுப்பது ரொம்ப சிம்பிளான வேலை தான்.. தினமும் காலையில் எழுந்து ஒரு மணி நேரம் நடந்து செல்லுங்கள்.. ஒரு மணி நேரம் நடக்க முடியாவிட்டால் ஒரு அரைமணி நேரமாவது நடங்கள்.. காலையில் ஒரு அரைமணி நேரம் மற்றும் மாலையில் ஒரு அரைமணி நேரம் நடக்க வேண்டும்.. இதை செய்தால் நாம் மட்டுமல்ல… நாம் குடும்பமே ஆரோக்கியமாக இருப்போம்.. நடப்பதுடன், மருத்துவர்களின் சரியான ஆலோசனைப்படி உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க தொடங்கினால் ஃபேட்டி லிவர் பிரச்சனை வருவதை முன்கூட்டியே தடுத்து அதில் இருந்து மீண்டு வருவோம்.. மருத்துவர்கள் நமக்கு சரியான வழிகாட்டுவார்கள். இவ்வாறு நடிகர் பிரசாந்த் கூறினார்.