நடிகை ஜோதிகாவை ரசிகை ஒருவர் செம டென்ஷனாக்கி உள்ளார்.ரசிகை ஒருவர் சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகாவுடன் சூர்யாவை ஒரு நாள் அனுப்பி வைப்பீர்களே, நான் சூர்யாவை 15 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். ஒரு நாள் மட்டும் என்னுடன் அனுப்பி வைப்பீங்களா என அசால்ட்டாக கேட்டுள்ளார்.
சினிமாவில் எந்தளவுக்கு பிசியாக இருந்தாலும் சூர்யா படங்களுக்கு ஜோதிகா துணையாகவும் ஜோதிகா படங்களுக்கு சூர்யா துணையாகவும் இருந்து வருகின்றனர். குடும்ப வாழ்க்கையையும் பேலன்ஸ்ட்டாக மெயின்டெயின் செய்து வருகின்றனர். இந்நிலையில், ரசிகை ஒருவர் சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகாவுடன் சூர்யாவை ஒரு நாள் அனுப்பி வைப்பீர்களே, நான் சூர்யாவை 15 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். ஒரு நாள் மட்டும் என்னுடன் அனுப்பி வைப்பீங்களா என அசால்ட்டாக கேட்டுள்ளார். அந்த ரசிகையின் கமெண்ட்டை கடந்து போகாமல் ஜோதிகா கொடுத்துள்ள பதில் தான் தற்போது டிரெண்டாகி வருகிறது.
தர்ஷிணி சூர்யா எனும் அந்த ரசிகைக்கு நடிகை ஜோதிகா “Oops not allowed” என அதற்கெல்லாம் அனுமதிக்க முடியாது என கமெண்ட் போட்டிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மேலும், சில்லுனு ஒரு காதல் படத்தில் ஒரு பெண் சூர்யாவை பார்த்து ஜொள்ளு விட ஜோதிகா போய் வெளுக்கும் காட்சிகளை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா, பூமிகா, ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவும் பூமிகாவும் காதலித்து இருப்பார்கள். சூர்யா பூமிகாவை காதலித்ததால் குந்தவையாக நடித்த ஜோதிகா அனுப்பி வைத்திருப்பார். அப்போது கூட அவர் பயப்படும் காட்சிகள் தான் படமாக்கி இருப்பார்கள். அதை வைத்துக் கொண்டு நிஜத்திலும் அப்படி கேட்டால் ஜோதிகா சும்மா விடுவாரா என ரசிகர்கள் ரவுண்டு கட்டி அந்த ரசிகையை ட்ரோல் செய்து வருகின்றனர்.