சென்னை வந்துள்ள ஜான்வி கபூர் இன்று முப்பாத்தம்மன் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் பெற்று வருகிறார். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். தெலுங்கில் ஜூனியர் என் டிஆர் உடன் தேவரா படத்தில் நடித்து வருகிறார். தற்போது, இவர் நடித்து முடித்துள்ள மிஸ்டர் & மிஸ்ஸஸ் மஹி (Mr and Mrs Mahi) திரைப்படம் வரும் மே.31 அன்று வெளியாகிறது. இதற்கான, புரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
நேற்று (மே.26) ஐபிஎல் இறுதிப்போட்டியைக் காண சென்னை வந்தவர், இன்று முப்பாத்தம்மன் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். இதுகுறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “முதல்முறையாக முப்பாத்தம்மன் கோவிலுக்கு வருகிறேன். அம்மா சென்னை வரும்போதெல்லாம் அவருக்குப் பிடித்த இடம் இதுதான்” எனப் பதிவிட்டுள்ளார்.